யூ-டியூப் பார்த்து கள்ளநோட்டு மோசடி..! சில்லரை மாற்றிய போது சிக்கிய நபர்


சென்னையில் கள்ள நோட்டு அடித்த விவகாரத்தில் சிக்கிய நபர், யூ டியூபை பார்த்து அச்சடித்து மோசடி செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

சனிக்கிழமை மாலை வளசரவாக்கத்தில் உள்ள கடைகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்து பொருட்கள் வாங்கய மர்ம நபர் மீது சந்தேகம் கொண்டு சிலர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

ஆய்வில் அவன் கொடுத்தவை கள்ளநோட்டுகள் என தெரியவந்தது. அதனையடுத்து அந்த நபரின் அங்க அடையாளங்களைக் கொண்டும் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டும் பின் தொடர்ந்து சென்ற போலீசார் பரணிபுத்தூர் பகுதியில் மடக்கினர்.

புளியந்தோப்பைச் சேர்ந்த இலியாஸ் என்ற அந்த நபர், யூடியூபைப் பார்த்து கள்ள நோட்டு அடிக்கக் கற்றுக்கொண்டதாகக் கூறியிருக்கிறான்.

முன்னதாக நூறு ரூபாய் நோட்டுகளை அச்சடித்து 40 ஆயிரம் ரூபாய்க்கு மாற்றியதாகவும், அப்போது மாட்டிக்கொள்ளாததால் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகளை அச்சடித்ததாகவும் இலியாஸ் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.