புகைப்பட கலைஞரை மீரட்டும் டி.எஸ்.பி.

 மத்திய அரசு அறிவுறுத்தி மூன்று ஆண்டுகளாகியும், நடவடிக்கை எடுக்காத தமிழக அரசு, ஐகோர்ட் உத்தரவுக்கு பின்பே, பொதுமக்கள் வாகனங்களில், 'பம்பர்'களை அகற்றி வருகிறது. அரசியல்வாதிகள், அதிகாரிகள் வாகனங்களில், இவை இன்னும் அகற்றப்படாதது, அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தின்போது, வாகனங்களையும், அதில் இருப்போரையும் பாதுகாத்துக் கொள்ள, பம்பர் பயன்படுத்தப்படுகிறது. 

ஆனால், இந்த பம்பர்களே, உயிரிழப்புக்குக் காரணமாகி வருகின்றன. பம்பர்களில் கண் கூசும் அளவுக்கு அதீத வெளிச்சம் பரப்பும் விளக்குகள் பொருத்துவதும், விபத்துக்கு முக்கிய காரணம்.வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள பம்பர் உள்ளிட்ட கூடுதல், 'பிட்டிங்'குகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகம், அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும், 2017 நவ., 29ல் கடிதம் அனுப்பி அறிவுறுத்தியுள்ளது. 

ஆனால், எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு எடுக்கவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு பின், கடந்த ஆண்டு நவ., 29ல் தமிழக போக்குவரத்து கமிஷனர் சார்பில், இது குறித்து, வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அப்போதும், எந்த ஆர்.டி.ஓ.,வும் நடவடிக்கை எடுக்கவில்லை . வி.ஐ.பி., மற்றும் வி.வி.ஐ.பி., வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களிலும் இவற்றை அகற்றுமாறு தலைமைச் செயலர் அறிவுறுத்தியும், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க் கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் வாகனங்களில் இவை பெரும்பாலும் அகற்றப்படவில்லை.

 திருவள்ளூர் டி.எஸ்.பி.துரைபாண்டியன் வாகனத்தில் உள்ள பம்பருடன் இருக்கும் புகைப்படத்தினை எடுக்க சென்ற புகைப்பட கலைஞரை மீரட்டும் டி.எஸ்.பி. மீது உரிய முறையில் துறை ரீதியான நடவடிக்கை எடுகக வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கையை முன் வைத்து உள்ளார்கள்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)