திடீர் திடீரென வங்கிக் கணக்கில் பறிபோகும் பணம்! விநோத சைபர் குற்றங்களால் திணறும் பொது மக்கள்! போலீசார் எச்சரிக்கை..

 


விநோத சைபர் குற்றங்களால் திடீர் திடீரென வங்கிக் கணக்கில் பறிபோகும் பணம் தொடர்பாக பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று காவல் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

இந்த கொரோனா காலகட்டத்தில் தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் விநோதமான குற்றங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அரங்கேறிக்கொண்டு இருக்கின்றன. இப்படியாக அன்றாடம் அரங்கேறும் விநோதமான சைபர் குற்றங்களால், அப்பாவி பொது மக்கள் அன்றாடம் திணறிக்கொண்டு இருக்கிறார்கள்.

குறிப்பாக வங்கி தொடர்பான சைபர் குற்றங்களை மிகவும் நூதனமான முறையில் புதிய புதிய கொள்ளையர்கள் அன்றாடம் அரங்கேற்றி வருகின்றனர். இது போன்று ஒரு நூதன முறை சைபர் கொள்ளை தற்போது புதிதாக நம் தமிழகத்தில் உருவெடுத்து உள்ளது.

அதன் படி, “வங்கிக் கணக்கில் திடீர் திடீரென பணம் பரிமாற்றம் நடந்துள்ளதாக, குறுஞ்செய்தி அனுப்பி நூதன முறையில் தான், இது போன்ற சைபர் கொள்ளையர்கள் பொது மக்களிடமிருந்து பணம் பறிப்பதில் ஈடுபட்டு வருகின்றனர்குறிப்பாக, ஒரு தனி நபர் ஒருவரின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டது போல், குறுஞ்செய்தி ஒன்று முதலில் சம்மந்தப்பட்ட செல்போன் எண்ணிற்கு வரும். அப்படி வரும் குறுஞ்செய்தி, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தவறுதலாக உங்கள் வங்கிக் கணக்கிற்குப் பணத்தைப் பரிமாற்றம் செய்ததாகக் கூறி சம்மந்தப்பட்ட நபரின் தொலைப்பேசி எண்ணில் பேசுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள்

இந்த முறையில் தான், சென்னை உட்பட நாட்டின் முக்கிய பகுதிகளில் கொள்ளையர்கள் பொது மக்களிடமிருந்து பணம் பறித்து வருகின்றனர்.

இது தொடர்பாக சென்னை அடையாறு துணை ஆணையர் விக்கிரமன் கூறும்போது, “இது போன் சைபர் குற்றங்கள் தொடர்ச்சியாக அரங்கேறும் போது மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று, அறிவுறுத்தி உள்ளார்.

“மர்ம நபர்களிடம் இருந்து அழைப்பு வந்தால், சம்மந்தப்பட்டவர்கள், நேரடியாக வங்கிற்கோ அல்லது வங்கிக் கணக்கிற்குச் சென்று பணம் உண்மையாக வந்துள்ளதா என்று முதலில் பார்க்க வேண்டும். ஆனால், நம்மை ஆய்வு செய்ய விடாமல், அந்த மர்ம நபர் நம்மை திசை திருப்பி, உடனடியாக கூகுள் பே அல்லது பேடிஎம் மூலம் அந்தப் பணத்தை, தொடர்பு கொண்டு அடையாளம் தெரியாத நபரின் எண்ணுக்குத் திருப்பி அனுப்புமாறு நம்மிடம் கேட்பார்கள் என்றும், இப்படியான முறையில் தான் சைபர் கொள்ளையர்கள் பணத்தை நூதன முறையில் பொது மக்களிடமிருந்து கொள்ளை அடிக்கின்றனர்” என்றும், அவர் எச்சரிக்கை செய்தார்.

“வங்கிக் கணக்கில் பணம் பரிமாறப்பட்டால், வங்கி அனுப்பும் குறுஞ்செய்தி போன்றே, போலியாக ஒரு குறுஞ்செய்தி அனுப்பி நூதன முறையில் ஏமாற்றுவதை சைபர் கொள்ளையர்கள் தற்போது புதிதாகத் தொடங்கி உள்ளார்கள்” என்றும், அவர் குறிப்பிட்டுப் பேசினார்.

“ இது போன்ற புகார்கள் சைபர் காவல் நிலையங்களில் தற்போது அதிகம் வந்து உள்ளது என்றும், இப்படி வங்கிக் கணக்கிலிருந்து பணம் பரிமாறப்பட்டது போன்று குறுஞ்செய்தி செல்போனுக்கு வந்தால், மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றும், அடையாறு துணை ஆணையர் விக்கிரமன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறிவுறுத்தி இருக்கிறார்.

Popular posts
கடலூர் தலைமை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்-மீது நடவடிக்கை எடுக்க ஹெல்த் அமைச்சருக்கு கோரிக்கை!
Image
நடுரோட்டில் கதறிய பெண் வழக்கறிஞர்-“இன்னும் எவ்வளவு பணம் வேணாலும் வாங்கித்தர்றேன்.. என்னோட வந்துடுங்க!”
Image
அரக்கோணம் அடுத்த சோகனூர் அருகே அரசு அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதாக கூறி அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியிடை நீக்கம்
Image
600 கோடியை ஏப்பம் விட்ட பாஜகவினர்; கும்பகோணத்தை அதிரவைத்த‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’.12 சொகுசு கார்களை பறிமுதல் செய்து அதிரடி!
Image
நடிகையுடன் நடைபெற்ற மது விருந்து..! பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!
Image