கர்நாடக சட்டமேலவை துணை சபாநாயகர் தண்டவாளத்தில் சடலமாக கண்டெடுப்பு


கர்நாடக மாநில சட்ட மேலவை துணை சபாநாயகர் தர்மே கவுடா சிக்கமங்களூரு அருகே ரயில் தண்டவாளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இறந்த தர்மே கவுடா, சடலத்துடன் ஒரு கடிதத்தையும் காவல்துறையினர் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

மீட்கப்பட்ட அவரின் உடல் சிக்கமங்களூரு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தர்மே கவுடா தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. அவரின் உடல் இரவு 2 மணியளவில் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.