விவசாயிகள் இன்று முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்... வாய்ப்பான தேதியில் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மத்திய அரசு அழைப்பு


விவசாய சங்கங்கள் தங்களுக்கு வாய்ப்பான தேதியில் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடர மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதனிடையே இன்று சாலைகளில் சமையல் செய்வதை நிறுத்தி, தொடர் உண்ணாவிரதம் மேற்கொள்ள இருப்பதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். 

டெல்லி அருகே 26வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று முதல் தொடர் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக விவசாயிகளின் சங்கங்கள் அறிவித்துள்ளன. ஓரிரு நாட்களில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்க உள்ளதாக மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ள நிலையில், விவசாயிகள் தங்களுக்கு வாய்ப்பான தேதியில் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இதனிடையே அமிர்தசரஸில் இருந்தும் ஹரியானாவில் இருந்தும் பைக்குகளில் பேரணியாக திரண்டு வந்த இளைஞர்கள் பலர் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்க டெல்லி வந்தனர்

இன்று முதல் சாலைகளில் உணவு சமைப்பதை நிறுத்தப்போவதாகவும் தொடர் உண்ணாவிரதத்தில் மாறி மாறி ஈடுபட இருப்பதாகவும் விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.