சுற்றுச்சூழல்துறை கண்காணிப்பாளர் பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினர் சொத்து விவரத்தை கேட்டு பத்திரப்பதிவு துறைக்கு லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கடிதம்

 


ஞ்ச புகாரில் சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சுற்றுச்சூழல்துறை கண்காணிப்பாளர் பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரில் எவ்வளவு சொத்துக்கள் உள்ளன என்ற விவரத்தை கேட்டு பத்திரப்பதிவு துறைக்கு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

லஞ்ச புகார் எழுந்ததைத் தொடர்ந்து பாண்டியன் வீடு மற்றும் அலுவலகத்தில் அண்மையில் சோதனை நடத்தி, கணக்கில் வராத 7 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்து ஆவணங்கள், சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புடைய தங்க, வைர மற்றும் வெள்ளி பொருட்களை லஞ்ச ஒழிப்பு துறையினர் பறிமுதல் செய்தனர்.

ஒரு கோடியே 37 லட்சம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்ததோடு, வங்கி கணக்கில் இருந்த 75 லட்சம் ரூபாயையும் முடக்கினர்.

இந்நிலையில் பாண்டியன் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க கண்காணிப்பில் ஈடுபட்டிருப்பதோடு, அவரை நேரில் அழைத்து விசாரிக்கவும் லஞ்ச ஒழிப்பு துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா