அயோத்தியில் அமைய உள்ள பள்ளிவாசலின் கட்டிட வடிவமைப்பு தொடர்பான முதலாவது படத்தை பள்ளிவாசல் அறக்கட்டளை வெளியீடு
அயோத்தியா மாவட்டத்தில் தான்னிப்பூர் என்ற கிராமத்தில் அமைய உள்ள பள்ளிவாசலின் கட்டிட வடிவமைப்பு தொடர்பான முதலாவது படத்தை பள்ளிவாசல் அறக்கட்டளை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில் உச்ச நீதிமன்றம் வழங்கிய ராமஜென்ம்பூமி தீர்ப்பில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டவும், பள்ளிவாசல் கட்ட 5 ஏக்கர் இடம் ஒதுக்கவும் உத்தரவிட்டது. அதன்படி தான்னிப்பூரில் அமையும் பள்ளிவாசலை இந்திய-இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை என்ற அமைப்பு உருவாக்குகிறது.
இதற்கான அடிக்கல் அடுத்த ஆண்டு நாட்டப்படும் என கூறப்படுகிறது. பெரிய கண்ணாடி குவிமாடத்துடன் அமைக்கப்படும் இந்த பள்ளிவாசல் வளாகத்தில் நவீன மருத்துவமனை, இந்து-முஸ்லீம் சமூக பங்களிப்புகளை விவரிக்கும் அருங்காட்சியகம் உள்ளிட்டவை இடம் பெறும்