கமலுக்காக மதுரையிலிருந்து திடீரென திருச்சி சென்ற வாடகை ஹெலிகாப்டர்.. ஏற்கனவே பணம் கட்டியிருந்த சுற்றுலாப் பயணிகள் ஹெலிகாப்டர் நிறுவனத்தாரிடம் வாக்குவாதம்


மதுரையில் தனியார் வாடகை ஹெலிகாப்டரில் கமல் பயணம் மேற்கொண்ட நிலையில், அதில் பயணிக்க பணம் கட்டி காத்திருந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாநகரை சுற்றிப் பார்ப்பதற்காக 15 நிமிடங்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் கட்டணத்தில் பிளானட்-எக்ஸ் என்ற நிறுவனம் சார்பில் ஹெலிகாப்டர் சேவை வழங்கப்படுகிறது.

காலை தேர்தல் பிரச்சாரத்துக்காக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், இந்த ஹெலிகாப்டரில் திருச்சி சென்றார்.

இந்த நிலையில் ஹெலிகாப்டரில் பயணிப்பதற்காக ஏற்கனவே பணம் கட்டி காலை 9 மணி முதல் காத்திருந்த சுற்றுலாப் பயணிகள், ஹெலிகாப்டர் நிறுவனத்தாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.