காதல் திருமணம்: மகனை பிரித்த மருமகளை பழிவாங்க குழந்தையை ஒளித்து வைத்த மாமியார்!
காரைக்குடியில் மகனை தன்னிடமிருந்து பிரித்த மருமகளை பழிவாங்க குழந்தையை ஒளித்து வைத்து விட்டு , யாரோ கடத்தி சென்று விட்டதாக நாடகமாடிய தாயை போலீஸார் எச்சரித்து விடுவித்தனர்.

காரைக்குடி செஞ்சை பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி என்பவரின் மகன் அருண். இவர், செக்காலை பகுதியை சேர்ந்த தைனீஸ் மேரி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். பெற்றோரின் எதிர்ப்பை மீறி அருண் தைனீஸ் மேரியை திருமணம் செய்ததாக சொல்லப்படுகிறது. செக்காலை பகுதியில் தைனீஸ்மேரியுடன் தனியாக வீடு எடுத்து அருண் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், ஒரு மாதத்துககு முன்பு அருணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுவரை , அருணின் பெற்றோர் குழந்தையை வந்து பார்க்கவில்லை. இந்த நிலையில், நேற்று அருணின் தாயார் ராஜேஷ்வரி மகன் வீட்டுக்கு சென்று பேரக்குழந்தையை பார்த்து கொஞ்சியுள்ளார். தன் வீட்டுக்கு தாயார் வந்ததால் அருணும் தைனீஸ்மேரியும் மகிழ்ந்தனர். பின்னர் ராஜேஷ்வரி, 'தந்தை ஆரோக்கியராஜிடத்தில் பேரனை காட்டினால் மனம் மாறி விடுவார் , உன்னை உடனே வீட்டுக்குள் சேர்த்துக் கொள்வார்' என்று மகனிடத்தில் ஆசை வார்த்தை கூறியுள்ளார். ' பிள்ளையை எடுத்து சென்று தந்தையிடத்தில் காட்டி விட்டு வருகிறேன்' என்று கூறி குழந்தையை எடுத்து சென்றுள்ளார்.

பின்னர், திடீரென்று வீட்டுக்கு ஓடி வந்த ராஜேஷ்வரி, காரில் வந்த யாரோ குழந்தையை கடத்தி விட்டு சென்று விட்டதாக கூறினார். இதனால், பதறிப் போன தைனீஸ்மேரி குழந்தை காணாமல் போனது குறித்து காரைக்குடி போலீஸில் புகாரளித்தார். விசாரணையில் ராஜேஷ்வரி முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகம் ஏற்பட்டது. குழந்தை கடத்தப்பட்டதாக ராஜேஷ்வரி குறிப்பிட்ட இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்த போது அப்படி எந்த காட்சியும் பதிவாகவில்லை. இதையடுத்து, ராஜேஷ்வரியிடத்தில் போலீஸார் சற்று கடுமையாக விசாரிக்க தொடங்கினர்.

அப்போதுதான், ராஜேஷ்வரி குழந்தையை தன் வீட்டருகே வசிக்கும் பாத்திமா என்ற பெண்ணிடத்தில் கொடுத்து வைத்திருப்பதாகவும் தன்னிடத்தில் இருந்து மகனை பிரித்த மருமகளை பழிவாங்க இது போன்ற செயலில் ஈடுபட்டதாக கூறினார் இதையடுத்து, பாத்திமாவிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்ட போது, தன் மகனும் மகளும் வெளியூர் சென்றுள்ளனர். எனவே, குழந்தையை கொஞ்ச நேரம் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி ராஜேஷ்வரி குழந்தையை கொடுத்ததாக கூறினார். இதையடுத்து, குழந்தையை மீட்ட போலீஸார் பெற்றோரிடத்தில் ஒப்படைத்தனர். தாய் மீது இருந்த பாசத்தினால் அருண் தன் புகாரை வாபஸ் பெற்றதால் ராஜேஷ்வரி எச்சரித்து விடுவித்தனர்

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)