போலீசுக்கு பயந்து தலைமறைவான மதுரை மன்மதன்..! பாதிக்கப்பட்ட பெண்கள் ஆவேசம்

மதுரை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணிக்கு சென்ற பெண் ஒப்பந்த பணியாளர்களிடம் தொடர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகாருக்குள்ளான மன்மத அதிகாரியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


 


மதுரை மாநகராட்சியில் சுகாதாரத்துறை ஒப்பந்த பணியாளராக மருந்து வழங்கும் வேலைபார்த்து வரும் பெண் ஒருவர் முதல் அமைச்சரை சந்தித்து மனுஅளிக்கும் நோக்கத்தில் அவர் வரும் வழியில் காத்திருந்தார்.


 


பாதுகாப்புக்கு நின்ற போலீசார் இதனை கவனித்து, அந்த பெண்ணை தனியாக அழைத்துச்சென்று விசாரித்தனர். தான் பணி புரிந்து வரும் மதுரை மாநகராட்சியின் 17 வது வார்டுக்குட்பட்ட சம்மட்டிபுரத்தில் உள்ள சுகாதார துறை ஆய்வாளர் முருகன் என்பவர், தனக்கும் தன்னுடன் அலுவலகத்தில் பணிபுரியும், பெண்களிடமும் பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவதாக புகார் தெரிவித்தார்.


 


மேலும் அவரது சீண்டல்களுக்கு ஒத்துழைக்காவிட்டால் வேலையில் இருந்து அனுப்பி விடுவேன் என்று மிரட்டுவதாகவும் இதனால் கடுமையான மன உளைச்சல் அடைந்து போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளாததால் முதல்வரை சந்தித்து நேரடியாக புகார் அளிக்க வந்தேன் என்றார் .


 


 


அந்தப்பெண்ணின் புகாரை கேட்டறிந்த மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா, புகார் குறித்து உடனடி நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். மகளிர் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் சுகாதார ஆய்வாளர் முருகனை விசாரணைக்கு அழைத்துவர சென்ற போது அவன் செல்போனை சுவிட்ஜ் ஆப் செய்து விட்டு தலைமறைவானது தெரியவந்தது. அவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


 


அந்த ஒப்பந்த ஊழியரை போலவே அங்கு கணினி ஆபரேட்டராக பணிபுரியும் பெண் ஒருவரும் பாதிக்கப்பட்டு உள்ளார். அவர் தனது குடும்ப சூழ்நிலை குறித்து புகார் அளிக்கவில்லை என்று கூறினாலும் மன்மதன் போல அதிகாரி முருகன் செய்த அத்துமீறல்களை புட்டு புட்டு வைத்தார்.


 


பணிக்கு செல்லும் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் இது போன்ற அராஜக அதிகாரிகளின் அரசு பணியை பறிப்பதோடு, சட்டத்தின் முன் நிறுத்தி சிறைக்கு அனுப்ப வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)