டெல்லியில் மத்திய அரசு, விவசாய சங்கப் பிரதிநிதிகள் இடையே ஐந்தாம் சுற்றுப் பேச்சுவார்த்தை

டெல்லியில் மத்திய அரசுக்கும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சு தொடங்கி நடைபெற்று வருகிறது.


 


முந்தைய கூட்டத்தில் வேளாண் சட்டங்களில் தெரிவித்த குறைபாடுகள் குறித்து, அரசு எழுத்து மூலம் பதிலளிக்க வேண்டும் என விவசாயிகள் கேட்டுக்கொண்டனர்.


 


புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், திருத்தங்கள் செய்யலாம் என்பதை ஏற்க முடியாது என்றும் விவசாயிகள் தெரிவித்தனர். மேற்கொண்டு பேச்சு நடத்த விரும்பவில்லை என்றும், கோரிக்கைகள் பற்றிய அரசின் முடிவை அறிந்துகொள்ளவே விரும்புவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.


 


பேச்சில் பங்கேற்ற விவசாய சங்கப் பிரதிநிதிகள் அரசால் வழங்கப்பட்ட உணவை ஏற்க மறுத்துவிட்டதுடன், தங்கள் கூட்டமைப்பினர் சமைத்துக் கொண்டுவந்த உணவையே உண்டனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா