அத்திவரதர் தரிசனத்தில் வரவு செலவில் குளறுபடி... ஆர்டிஐ தகவலால் அம்பலமான முறைகேடு

தொடக்கத்தில், சந்தன நிற வி.ஐ.பி பாஸ் ரூ 500லிருந்து, ரூ.1000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. பச்சை நிற வி.வி.ஐ.பி பாஸ் ரூ.1000லிருந்து 5000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.


காஞ்சிபுரத்தில் கடந்த ஆண்டு அத்திரவரதர் வைபவம் நடைபெற்றபோது தரிசன டிக்கெட் விற்பனையில் முறைகேடு நடைபெற்றுள்ளது ஆர்டிஐ தகவல் மூலம் அம்பலமாகியுள்ளது.


காஞ்சிபுரத்தில் அனந்தசரஸ் குளத்திற்குள் சயனிக்கும் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியில் வந்து பக்தர்களுக்கு தரிசனம் தருவது வழக்கம். அந்த வகையில் 1979 ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அத்திவரதர் தரிசனம் நடைபெற்றது. இந்த விழா நடைபெற்ற 48 நாட்களில் 10 கோடியே 7 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.


அத்திவரதர் தரிசனத்தின்போது நடைபெற்ற வரவுசெலவு கணக்குகளில் பெரும் குளறுபடி நடந்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இந்த விழாவின்போது 50 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளில் தொடங்கி ஆட்களுக்கு தகுந்தவாறு விதவிதமான பாஸ்கள் விற்பனை செய்யப்பட்டன. பச்சை நிற பாஸ் வி.வி.ஐ.பிக்களுக்கும், சந்தன நிற பாஸ் வி.ஐ.பிக்களுக்கும் வழங்கப்பட்டன.


 


தொடக்கத்தில், சந்தன நிற வி.ஐ.பி பாஸ் ரூ 500லிருந்து, ரூ.1000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. பச்சை நிற வி.வி.ஐ.பி பாஸ் ரூ.1000லிருந்து 5000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. கடைசி வார நாட்களில் சந்தன நிற விஐபி பாஸ் 3000 ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாய் வரையும் பச்சை நிற பாஸ் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேலும் விற்பனை செய்யப்பட்டது.


இந்நிலையில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆவணத்தில் அத்திவரதர் தரிசன டிக்கெட் விற்பனை குறித்த கேள்விகளுக்கு மாவட்ட நிர்வாகம் குளறுபடியாக பதிலளித்துள்ளது. பாஸ்கள் அச்சடிப்பு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு எந்தவிதமான பாஸும் அச்சடிக்கப்படவில்லை என பதிலளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் டிக்கெட் விற்பனையில் பெரும் முறைகேடு நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா