அண்ணல் அம்பேத்கரின் 64வது நினைவு தினம் இன்று அனுசரிப்பு

அண்ணல் அம்பேத்கரின் 64வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதையொட்டி அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள மும்பையின் தாதரில் அமைந்துள்ள சைத்யபூமியில் மக்கள் அஞ்சலி செலுத்த திரண்டனர்.


 


ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான மக்கள் இந்நிகழ்வில் பங்கேற்கும் நிலையில் கொரோனா பரவல் அச்சத்தால் இந்த ஆண்டு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி ஏற்கனவே அறிவித்தது. ஆயினும் அதிகாலையிலேயே சைத்யபூமி முன் திரண்ட பொதுமக்கள் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


 


இதனிடையே ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, நம் தேசத்திற்காக அம்பேத்கர் கண்ட கனவுகளை நிறைவேற்ற தாங்கள் கடமைப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.