நக்ரோட்டா தாக்குதலுக்குப் பின் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் பாகிஸ்தானுக்குள் சென்று திரும்பியதாகத் தகவல்

ஜம்முவில் உள்ள நக்ரோட்டா தாக்குதலுக்குப் பின் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் பாகிஸ்தானுக்குள் நுழைந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.


 


கடந்த மாதம் இந்தத் தாக்குதல் நடந்த அடுத்த சில தினங்களுக்குப் பின்னர் பிஎஸ்எப் விசாரணைக் குழுவினர், பயங்கரவாதிகளின் வயர்லெஸ் பேச்சை இடைமறித்து கேட்டதாகக் கூறப்படுகிறது.


 


அதில் பதிவான தகவல்களின் படி காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லையைக் கடந்து சென்ற பிஎஸ்எப் வீரர்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் சுமார் 200 மீட்டர் வரை ஊருவிச் சென்று சுரங்கப் பாதையின் வாய்ப் பகுதியைக் கண்டுபிடித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


 


அதன் அருகிலேயே பாகிஸ்தான் ராணுவ முகாம் இருந்ததாகவும், அவர்களுக்குத் தெரியாமல் இந்திய வீரர்கள் திரும்பியதாகவும் கூறப்படுகிறது.