ஆன்லைனில் சிலிண்டர் புக் செய்வதன் மூலம் ரூ.500 வரை கேஷ்பேக் பெறலாம்.. எப்படி தெரியுமா..

 LPG சிலிண்டர் முன்பதிவு செய்வதில் பல்வேறு புதிய முறைகள் நடைமுறையில் உள்ளது. இதில் தற்போது ஆன்லைன் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ. 500 கேஷ்பேக் பெறலாம் என்று பேடிஎம் செய்தி வெளியிட்டுள்ளது. இண்டேன், ஹெச்.பி, பாரத் சமையல் எரிவாயு வாடிக்கையாளர்கள் கேஸ் சிலிண்டர் புக் செய்யும் போது ₹500 பணத்தை கேஷ்பேக்காக திரும்ப பெறமுடியும். எரிவாயு சிலிண்டர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் போது மானியத்துடன் கேஷ்பேக் சலுகையும் பெறமுடியும். பேடிஎம் ஆப்ஸின் மூலம் முதல்முறையாக கேஸ் புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. 

கேஷ்பேக் பெறுவதற்கான வழிமுறைகளை இங்கே காண்போம்.. 

ஸ்டெப் 1. கேஷ்பேக் பெற, முதலில், நீங்கள் 'ரீசார்ஜ் & பே பில்கள்' என்ற ஆப்சனுக்கு செல்ல வேண்டும்.

ஸ்டெப் 2. இப்போது 'சிலிண்டரை முன்பதிவு செய்' 'Book a cylinder'என்பதைத் கிளிக் செய்து, உங்கள் எரிவாயு சிலிண்டரின் விவரங்களைக் கொடுங்கள்.

ஸ்டெப் 3. பின்னர் 'FIRSTLPG' ப்ரோமோ கோடை பயன்படுத்துங்கள், இந்த ப்ரோமோ கோடை நீங்கள் பணம் செலுத்துவதற்கு முன் கட்டாயமாக அப்ளை செய்ய வேண்டும். அப்போதுதான் உங்களுக்கு இந்த சலுகை கிடைக்கும்.                                                       

எல்பிஜி விநியோகத்திற்காக பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியத்துடன் பேடிஎம் (Paytm) ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிறுவனம் ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கான புதிய கேஷ்பேக் சலுகையை மக்களிடையே கொண்டு வந்துள்ளது. இதற்கிடையில், அடுத்த 12-18 மாதங்களில் சுமார் 20 லட்சம் கோ-பிராண்டட் கிரெடிட் கார்டுகளைஅறிமுகப்படுத்த பல்வேறு கார்ட் வழங்குநர்களுடன் இணைய உள்ளதாக Paytm தகவல் அளித்துள்ளது. 


இந்த நடவடிக்கை பயனர்களை டிஜிட்டல் பொருளாதாரத்தில் சேர அனுமதிப்பதன் மூலம் கிரெடிட் சந்தையை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று Paytm நிறுவனம் தெரிவித்துள்ளது. 'அடுத்த தலைமுறை' கிரெடிட் கார்டுகளை உருவாக்குவது - மோசடி பரிவர்த்தனைகளுக்கு எதிரான காப்பீட்டு பாதுகாப்பு, தனிப்பயனாக்கப்பட்ட செலவு பகுப்பாய்வு, பாதுகாப்பற்ற கார்டைத் தடுப்பது மற்றும் முகவரியை புதுப்பித்தல் ஆகியவற்றுக்கான உடனடி ஒன்-டச் சேவைகளை வழங்கும் என்றும் Paytm அறிவித்தது. "நம் நாட்டில், கிரெடிட் கார்டுகள் இன்னும் சமூகத்தின் வசதியான பிரிவினருக்கான ஒரு பொருளாகக் கருதப்படுகின்றன, அதனால் அதன் நன்மைகளை எல்லோராலும் பெற முடியவில்லை. 

Paytm மூலம், இந்தியாவில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கும், வளர்ந்த தொழில் வல்லுநர்களுக்கும் பயனளிக்கும் கிரெடிட் கார்ட்களை வழங்குவதே எங்கள் நோக்கம்" என்று Paytm Lending ன் தலைமை நிர்வாக அதிகாரி பவேஷ் குப்தா தெரிவித்துள்ளார். மற்ற ஆப்ஸ்களில் நீங்கள் ஒரு சிலிண்டரை புக் செய்தால் அதற்கான கேஷ்பேக் கிடைக்கும் ஆனால் அது பேடிஎம் அளிக்கும் கேஷ்பேக் தொகையை விட மிகக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்