அப்பாவி சிறுமியும் 50 அரக்கர்களும்..! அந்த தொழிலுக்கு 50 குழுக்கள்..!

 


சென்னையில் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த புகாருக்குள்ளான காவல் ஆய்வாளர், பா.ஜ.க பிரமுகர், பைனான்சியர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சிறுமியை சீரழித்த மேலும் 50 பேரின் பட்டியல் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கு 50 குழுக்கள் பாலியல் தொழில் நடத்தும் அதிர்ச்சி தகவல் வெளியான பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.


 


சென்னை எண்ணூரில் 13 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக அவரது சகோதரி, சகோதரியின் கணவர் உள்ளிட்ட 8 பேர் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டனர்.


 


பாலியல் தொழிலுக்கு புரோக்கராக செயல்பட்டதாக கூறப்படும் பா.ஜ.க பிரமுகர் ராஜேந்திரன், பாலியல் தொழிலுக்கு ஆதரவாக இருக்க சிறுமியை சீரழித்தாக காவல் ஆய்வாளர் புகழேந்தி, சிறுமியின் சகோதரிக்கு கொடுத்த வட்டிப்பணத்திற்காக சிறுமியை சீரழித்தாக பைனான்சியரும், தனியார் தொலைக்காட்சியின் ஏரியா எழுத்தருமான வினோபாஜி ஆகியோர் போக்சோ சட்டத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.


 


சிறுமியிடம் ஒவ்வொருவரின் புகைப்படங்களாக காட்டி காவல்துறையினர் விசாரித்த போது வினோபாஜி செய்த உச்சக்கட்ட சேட்டைகள் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து வினோபாஜியிடம் சிறப்பு கவனிப்புடன் நடத்தப்பட்ட விசாரணையில் எண்ணூர் சுற்றுவட்டார பகுதியில் மட்டும் பாலியல் தொழிலுக்கு என்று 50 குழுக்கள் இருப்பதாகவும், அவற்றுக்கு எல்லாம் தான் ஆயிரக்கணக்கில் பைனான்ஸ் கொடுத்து வந்ததாகவும் வினோபாஜி ஒப்புக் கொண்டுள்ளான்.


 


சம்பந்தப்பட்ட சிறுமியின் சகோதரியும் அவரது கணவரான மதன்குமார் என்பவரும் இணைந்து வெளி மாநில பெண்களை மாத வாடகைக்கு எடுத்து வந்து பாலியல் தொழில் செய்வதற்கு வினோபாஜியிடம் வட்டிக்கு பணம் பெற்றுள்ளனர். அப்போது பணத்திற்கு ஆசைப்பட்டு தனது தங்கையான 13 வயது சிறுமியையும் பாலியல் தொழில் எண்ணும் பாழுங்கிணற்றில் தள்ளியுள்ளார்.


 


அதுவரை ஆயிரக்கணக்கில் வந்த வருமானம் ஒரே மாதத்தில் லட்சக்கணக்கில் வரத்தொடங்கியதும் பணத்தை பங்கிடுவதில் கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். மதன்குமார் தனது சகோதரி சந்தியாவுடன் சேர்ந்து தனியாக தொழில் செய்ய தொடங்கியுள்ளார். சிறுமியின் சகோதரிக்கு வினோபாஜியின் ஆதரவு இருந்ததால் இருவருக்கும் தொழில் போட்டி ஏற்பட்டு போலீசில் போட்டுக் கொடுத்துள்ளார் மதன்குமார்.


 


இதற்கு பழிவாங்கும் விதமாக தனது கணவர் மதன்குமார் தன்னை மிரட்டுவதாக சிறுமியின் சகோதரி புகார் அளிக்க வீட்டிற்கு விசாரணைக்கு சென்ற மகளிர் போலீசார், வீட்டில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட சிறுமி ஒருவரை பார்த்து அவரிடம் விசாரித்த போது அந்த சிறுமி தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை போலீசாரிடம் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.


 


இதையடுத்து அந்த சிறுமியின் சகோதரி செல்போனை பறிமுதல் செய்து அதில் இருந்த தொடர்பு எண்களை வைத்து, அதில் சிறுமி அடையாளம் காட்டிய பாலியல் அரக்கர்களை காவல்துறையினர் அடுத்தடுத்து கைது செய்தனர்.


 


அந்த வரிசையில் மருத்துவர், முன்னாள் டி.எஸ்.பி, உள்ளூர் அரசியல் பிரமுகர், இரு ஆய்வாளர்கள் என சுமார் 50 பேரின் பெயர் பட்டியல் தயாராக இருப்பதாகவும் அவர்களையும் ஒருவர் பின் ஒருவராக கைது செய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.


 


இந்தபகுதியில் 50 பாலியல் குழுக்களுக்கு பைனான்ஸ் செய்து வந்த வினோபாஜியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவனை, நீதிபதி கடுமையாக கண்டித்ததாகவும், மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பண உதவியும் வழங்கியதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.


 


சென்னையில் பாலியல் தொழிலை ஒழிப்பதற்கு உதவி ஆணையர் தலைமையில் ராஜேஷ் கண்ணா, கோபாலகுரு ஆகிய இரு காவல் ஆய்வாளர்களை கொண்ட விபச்சார தடுப்பு பிரிவு ஒன்று தனியாக இயக்கி வருகின்றது. அப்படி இருக்க சென்னையின் பல பகுதிகளிலும் சத்தமின்றி நடக்கின்ற இத்தகைய பாலியல் தொழிலை கண்டும் காணாமல் அவர்கள் இருந்து விடுவதால் இது போன்ற கொடுமைகள் தொடர்வதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.


 


அதே நேரத்தில் சென்னை பெரு நகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வாலின் உத்தரவால் பாலியல் அரக்கர்கள் பாரபட்சமின்றி அடுத்தடுத்து கைது செய்யப்படுவது பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது..!


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!