இங்கிலாந்திலிருந்து மதுரை திரும்பி மாயமான 4 பேரில் இருவரை அடையாளம் கண்டுள்ள சுகாதாரத்துறை

 


இங்கிலாந்திலிருந்து மதுரை திரும்பி மாயமான 4 பேரில் இருவரை அடையாளம் கண்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மொத்தம் 88 பேர் இங்கிலாந்திலிருந்து மதுரை வந்திருந்த நிலையில், அவர்களில் 84 பேரை கண்டறிந்து சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

மீதமுள்ள 4 பேருடைய வீடுகளும் பூட்டப்பட்டிருந்ததால் அவர்களை தேடும் முயற்சி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அந்த 4 பேரில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் ஒருவரை பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் என முடிவு வந்திருப்பதாகவும் கூறிய அதிகாரிகள், வெளியூரிலுள்ள மற்றொருவருக்கு நாளை பரிசோதனை நடத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்