இனி 24 மணி நேரமும் ஆர்டிஜிஎஸ் சேவையைப் பயன்படுத்தலாம்: ரிசர்வ் வங்கி


 வங்கிகளில் பெரிய அளவில் பணம் அனுப்ப பயன்படுத்தப்படும், RTGS சேவையானது 24 மணி நேரமும் செயல்படும் வகையல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. NEFT சேவையில் ஒரு வாடிக்கையாளர் அதிகபட்சம், 2 லட்சம் ரூபாய் வரை மட்டுமே பணம் அனுப்ப முடியும். அதற்கு மேல் அனுப்ப வேண்டும் என்றால், RTGS சேவையைத்தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தற்போதைய நடைமுறையில், வங்கி வேலை நாட்களில் மட்டும், காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த சேவையை பயன்படுத்த முடியும்.

வரும் 14-ம் தேதி முதல் 24 மணி நேரமும் இந்த சேவையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, நாள் ஒன்றிற்கு இந்தியாவில், RTGS மூலம் 4 லட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் பணப் பரிமாற்றம் செய்யப்படுகிறது. இது இனி வரும் காலங்களில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாற்றத்தின் மூலம், உலக அளவில் 24 மணி நேரமும் RTGS சேவை நடைமுறையில் இருக்கும் ஒரு சில நாடுகளின் பட்டியலில், இந்தியாவும் இணைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)