சசிகலா ஓரிரு நாளில் விடுதலையாக வாய்ப்பு...

சசிகலாவின் தண்டனை காலம் முடிவடைந்து ஓரிரு நாளில் அவர் விடுதலையாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, தனது தண்டனை காலம் முடிவடைந்து ஓரிரு நாளில் விடுதலையாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 


 


 


சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா தனக்கு விதிக்கப்பட்ட 10 கோடியே 10 ஆயிரம் ரூபாய் அபராதத்தை கடந்த மாதம் செலுத்தினார். இதன் நகல் சிறைத்துறைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் மனு அளித்திருந்தார்.


இதுதொடர்பாக விரைவில் முடிவெடித்து தெரிவிக்கப்படும் என சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும், சிறையில் உள்ள சசிகலா எந்தநேரமும் விடுதலையாக வாய்ப்புள்ளதாகவும் ராஜா செந்தூர் பாண்டியன் கூறியுள்ளார்.