டெல்லியில் 10-வது நாளை எட்டியது விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதுவரை 4 கட்ட பேச்சுவார்த்தைகளில் எந்த உடன்பாடும் எட்டப்படாத நிலையில் 5வது முறையாக பேச்சுவார்த்தை பிற்பகலில் நடைபெறுகிறது. விவசாய சங்க பிரதிநிதிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிராகரித்து வருவதால், நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதனிடையே விவசாய சங்க பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தைக்கு முன்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், விவசாயத்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் ஆகியோர் பிரதமர் மோடியுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டனர்.


வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும்வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தங்கள் முடிவில் தீர்க்கமாக இருப்பதால் மத்திய அரசுக்கு சிக்கல் அதிகரித்துள்ளது. நாடு முழுக்க இருந்து விவசாயிகள் டெல்லியை நோக்கி தொடர்ந்து குவிந்து வருவதால் பாதுகாப்பு அளிக்க போலீசாரும் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.


 


 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)