இந்தியாவின் தலைசிறந்த 10 காவல்நிலையங்கள் பட்டியலில் சேலத்திற்கு 2-வது இடம்

இந்தியாவின் தலைசிறந்த 10 காவல்நிலையங்களின் பட்டியலில் சேலம் மாவட்டம் 2-வது இடத்தை பிடித்துள்ளது. நாட்டின் சிறப்பாக செயல்படும் 10 காவல் நிலையங்களின் பட்டியலை மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தின் சேலம் காவல் நிலையம், உ.பி.யில் மொராதாபாத் காவல் நிலையம், சத்தீஸ்கரில் சூரஜ்பூர் உள்ளிட்டவை அடங்கும்.


 


சிறந்த காவல் நிலையங்களுக்கான இந்த ஆண்டு கணக்கெடுப்பு சவாலான சூழ்நிலையில் உள்துறை அமைச்சகத்தால் நடத்தப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் காரணமாக தொலைதூர பகுதிகளில் அமைந்துள்ள காவல் நிலையங்களை அணுகுவது கடினமாக இருந்தது. இதன் விளைவாக, அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களின்படி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


மாநிலம் வாரியாக எடுக்கப்பட்ட தரவுகள், நேரடி கண்காணிப்பு மற்றும் பொதுமக்களின் கருத்துகள் மூலம் 16, 661 காவல்நிலையங்களில் இந்த 10 காவல்நிலையங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. மாநிலத்தில் நடைபெறும் குற்றம், பெண்களுக்கு எதிரான வன்முறை, பொதுமக்களின் புகார்களை நிவர்த்தி செய்வதில் சிறப்பாக செயல்பட்டுள்ள காவல்நிலையங்கள் முதல் 10 இடங்களை பிடித்துள்ளது. மக்களின் புகார்களை நிவர்த்தி செய்வது, குற்றங்களை கண்டுபிடிப்பதில் 80 சதவீதமும், காவல் நிலையங்களின் உட்கட்டமைப்பு 20 சதவீதம் என காவல்நிலையங்கள் தரம் பிரிக்கப்பட்டுள்ளன.


முதல் 10 இடங்களை பிடித்த காவல்நிலையங்கள்


1. தோபல் - மணிப்பூர்


2. சேலம் - தமிழ்நாடு


3. சாங்லாங் - அருணாச்சலபிரதேசம்


5. தெற்கு கோவா - கோவா


6. வடக்கு மற்றும் மத்திய அந்தமான், அந்தமான் & நிக்கோபார் தீவுகள்


7. கிழக்கு மாவட்டம் - சிக்கிம்


8. மொரதாபாத் - உத்திரபிரதேசம்


9. தாத்ரா & நகர் ஹவேலி


10. கரீம்நகர் - தெலுங்கானா


 


உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்


Popular posts
நடுரோட்டில் கதறிய பெண் வழக்கறிஞர்-“இன்னும் எவ்வளவு பணம் வேணாலும் வாங்கித்தர்றேன்.. என்னோட வந்துடுங்க!”
Image
600 கோடியை ஏப்பம் விட்ட பாஜகவினர்; கும்பகோணத்தை அதிரவைத்த‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’.12 சொகுசு கார்களை பறிமுதல் செய்து அதிரடி!
Image
நடிகையுடன் நடைபெற்ற மது விருந்து..! பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!
Image
சர்ச்சையை கிளப்பிய அதிகாரி மீது நடவடிக்கை - வடக்கிற்கு உரக்கச் சொன்ன தமிழக அரசு உதவி ஆணையர் விடுவிப்பு - மாநகராட்சி ஆணையர் உத்தரவு
Image
தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் வழங்கிய நோட்டீஸை அடுத்து டி.ஜி.பி சைலேந்திரபாபு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
Image