தேசிய பத்திரிக்கையாளர் தினத்தை முன்னிட்டு : ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் வாழ்த்து

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது .


 1966 ம் ஆண்டு பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா தோற்றுவிக்கப்பட்ட தினமான நவம்பர் 16 தேசிய பத்திரிகைகள் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு தேசிய பத்திரிகையாளர் தினமாகவும் கொண்டாடப்படுகிறது . 


நாடு முழுவதும் பத்திரிகையாளர்கள் செய்தியை சேகரிக்க உயிரை பணிய வைத்து இரவும் பகலுமாக தொடர்ந்து உழைத்து வரும் பத்திரிக்கையாளர்கள் மீதான தாக்குதலையும் படுகொலைகளையும் தடுத்து பத்திரிக்கையாளர்களுக்கு தக்க பாதுகாப்பு அளித்திட மத்திய மாநில அரசுகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் .


உண்மையை நிலைநாட்டி தேசத்தை பாதுகாக்க அயராமல் உழைத்து கொண்டிருக்கும் பத்திரிக்கையாளர்கள் அணைவருக்கும் தேசிய பத்திரிக்கையாளர்கள் தின நல் வாழ்த்துக்களை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் தெரிவித்து கொள்கிறோம். என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா