அதிமுக முன்னாள் எம்எல்ஏவின் மகளுக்கு ஆடம்பர சீர்வரிசை - இணையத்தில் வைரலாகும் மதுரையை அசரவைத்த திருமணம்!

மதுரையில் நடைபெற்ற திருமணத்தில் டிராக்டர், கார் மற்றும் ஒராண்டுக்கு தேவையான அரிசி உள்ளிட்ட பொருட்கள் என்ற நீண்டதொரு பட்டியலில் சீர் வரிசை வழங்கப்பட்ட திருமணம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.


 


மதுரை பதினெட்டாங்குடி பகுதியை சேர்ந்த மதுரை கிழக்கு தொகுதியின் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசன் - அரசி தம்பதியரின் மகளான ஆர்த்தி என்ற மணப்பெண்னுக்கும்,


மதுரை கொடிமங்கலம் பகுதியை சேர்ந்த வைத்தியநாதன் - சித்ரா தம்பதியரின் மகன் வெற்றிவேல் என்ற மணமகனுக்கும் கடந்த 4 ம் தேதி நாகமலைபுதுக்கோட்டை பகுதியிலுள்ள பிரமாண்டமான திருமண மஹாலில் திருமணம் நடைபெற்றுள்ளது.


இதில் மணப்பெண் வீட்டு சார்பாக கொடுக்கப்பட்ட சீர்வரிசை பொருட்கள் தற்போது சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. கல்யாணம் மண்டபம் முழுவதிலும் பாத்திரங்கள், வீட்டு உபயோகபொருட்களான ப்ரீட்ஜ், வாசிங்மெஷின், ஏசி, ஏர்கூலர், பேன், தொடங்கி அனைத்து மின்சாதன பொருட்களும் , ஸ்பூன் தொடங்கி பெரிய ஆண்ட வரை அத்தனை வகையான சில்வர் மற்றும் பித்தளை பாத்திரங்களும், விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் ஆட்டுகுட்டிகளும், ட்ராக்டரும் வழங்கப்பட்டது.


மேலும் கார், பைக், ஸ்கூட்டர் வாகனங்களையும் , அரிசி , கோதுமை, ரவை என அனைத்துவித சமையல் உணவு பொருட்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான சீர்வரிசைகளை குவித்துவைத்து தமிழரசன் தனது மகளுக்கு வழங்கியுள்ளார்.


இதனை திருமணத்திற்கு சென்றவர்கள் வீடியோவாகவும், புகைப்படங்களாகவும் எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்ட நிலையில் மதுரைக்கார பொண்ணுனான சும்மாவா மதுரையின் பாரம்பரியமான பெண் வீட்டு சீதனம் என மதுரையை சேர்ந்தவர்கள் பதிவிட்டுவருகின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு