இந்தியாவிலேயே முதன் முறையாக திருச்சியில் குழந்தைகளுக்கான பிரத்யேக காவல் நிலையம்

இந்தியாவிலேயே முதன் முறையாக திருச்சியில் குழந்தைகளுக்கான பிரத்யேக காவல் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.


 


திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா முன்னிலையில், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆனந்த், குழந்தைகளுக்கான பிரத்யேக காவல் நிலையத்தை திருச்சி, திருவெறும்பூர் காவல் நிலைய வளாகத்தில் திறந்து வைத்தார்.


 


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ஆனந்த், இந்தியாவில் 11 இடங்களில் குழந்தைகளுக்கான காவல் நிலையம் திறக்க உள்ளதாக தெரிவித்தார். குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் தமிழகம் 7வது இடத்தில் இருப்பதாக தெரிவித்தார்.