மக்கள் மன்ற நிர்வாகிகளை இன்று சந்திக்கிறார் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த், தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக்கூட்டத்தில் கட்சித் தொடங்குவது குறித்து மீண்டும் கருத்துக் கேட்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


நடிகர் ரஜினிகாந்த் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட இருக்கும் நிலையில் நேற்று மக்கள் மன்ற மாநில நிர்வாகி சுதாகர் ரஜினிகாந்துடன் போயஸ் கார்டன் இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார்.


அரசியல் கட்சியை தொடங்கி, அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக ரஜினிகாந்த் ஏற்கனவே அறிவித்தார்.


எனினும், கட்சி தொடங்குவதற்கான பணிகள் எதுவும் நடைபெறவில்லை. கொரோனா பரவல் காரணமாக கட்சி தொடங்கும் திட்டத்தை ஒத்தி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகின.


எனினும், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி உரிய நேரத்தில் முடிவெடுக்க உள்ளதாக ரஜினிகாந்த் விளக்கம் அளித்திருந்தார்.


இந்நிலையில், மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று காலை 9 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.


இந்நிலையில் நேற்று மக்கள் மன்ற மாநில நிர்வாகி சுதாகர் ரஜினிகாந்துடன் போயஸ் கார்டன் இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார்.


சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த இந்த ஆலோசனை குறித்தும், தன்னுடைய அரசியல் முடிவு தொடர்பான அறிவிப்பு குறித்தும் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய மாவட்ட நிர்வாகிகளுடன் பகிர்ந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதற்காக 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மாநிலம் முழுவதும் இருந்து இன்று சென்னைக்கு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து ரஜினி நாளை ரசிகர்களை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)