அரியர் தேர்வுகளை ரத்து செய்யமுடியாது - யுஜிசி திட்டவட்டம்

அரியர் தேர்வை ரத்து செய்து அனைவரும் பாஸ் என்ற அறிவிப்பை தமிழக அரசு தெரிவித்தது. இந்நிலையில் வழக்கறிஞர் ராம்குமார், அரியர் தேர்வு ரத்தை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் முடிவுகள் வெளியிடப்படுவதாக வழக்கு தொடர்ந்தார். அது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதில், அரியர் தேர்வுகளை ரத்து செய்யமுடியாது என உயர்நீதிமன்றத்தில் யுஜிசி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் கண்டிப்பாக அரியர் தேர்வை நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.


 


அரியர் மாணவர்களை தேர்ச்சி அடைய செய்ததை எதிர்த்த வழக்குடன் இந்த வழக்கும் நவம்பர் 20ல் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்து வழக்கை ஒத்துவைத்தனர். மேலும் வழக்கு தொடர்பாக தமிழக அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உயர் நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது