தடையை மீறி வேல் யாத்திரை செல்ல முயன்ற பாஜகவினர் போலீசாரால் தடுத்து நிறுத்தம்!

தடையை மீறி வேல் யாத்திரை மற்றும் வாகன பிரச்சாரம் மேற்கொள்ள முயன்ற பாஜகவினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். 


 


சென்னையை அடுத்த திருவொற்றியூர் வடிவுடை அம்மன் கோவிலுக்கு பாஜக மாநில தலைவர் முருகன் வேல் யாத்திரை தொடங்க வருவதையொட்டி, அங்கு பாஜக தொண்டர்கள் வந்தனர். மணலி சாலையில் போலீசார் அவர்களை தடுத்ததால், இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தடுப்புக்களை அகற்றிவிட்டு, பாஜகவினர் வாகனங்களில் சென்றதால், அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். இதையடுத்து, அந்த பகுதியில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். 


 


இதே போல் வேல் யாத்திரையில் கலந்து கொள்வதற்காக, வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை வந்த பாஜகவினரை பெருங்களத்தூரிலேயே போலீசார் தடுத்து கைது செய்தனர். சென்னை அடுத்த பெருங்களத்தூரில் செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையில் நூற்றுகணக்கான போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வேல் யார்த்திரையில் பங்கேற்க 10 வாகனங்களில் சென்னை வந்த 50-க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீசார் தடுத்து கைது செய்தனர். இதன் காரணமாக பெருங்களத்தூர்- வண்டலூர் நெடுஞ்சாலையில் பிற்பகல் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  


 


திருப்பூரில் வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்கக்கோரி வாகன பிரச்சாரம் மேற்கொள்ள முயன்ற பாஜக இளைஞர் அணியினரை போலீசார் திருப்பியனுப்பினர். 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)