சென்னையில் பல இடங்களில் வெளுத்து வாங்கும் மழை..!

சென்னையில் பல இடங்களில் மழை வெளுத்து வாங்குகிறது.


 


சென்னையில் காலையில் இருந்தே மேகமூட்டமாக இருந்த நிலையில் லேசான மழை பொழிந்தது. அதிகாலை நேரத்தில் மெல்லிய தூறலாக இருந்து பின்னர் காலை 9 மணி அளவில் கனத்த மழை வெளுத்து வாங்கியது.


 


ராயப்பேட்டை, அண்ணாசாலை, நந்தனம்,திருவல்லிகேணி என பல இடங்களில் நல்ல மழை பெய்தது. தொடர்ந்து பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. காலை நேரத்தில் அலுவலகங்களுக்கு இரு சக்கர வாகனங்களிலும், நடந்தும் செல்வோர், மழையில் நனைந்தபடியே சென்றனர்.