உச்சநீதிமன்ற ஊழியர் ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழப்பு

உச்சநீதிமன்ற ஊழியர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்.


 


நிர்வாக பிரிவில் பணியாற்றி வந்த ராஜேந்திர ராவத் என்பவர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார்.


 


ஆகஸ்ட் மாதம் வரை கொரோனாவால் 125 உச்சநீதிமன்ற ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டனர். கொரோனா காரணமாக, குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்டே உச்சநீதிமன்றத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன.