நடமாடும் நகை கடை போல் தங்க மாஸ்க் அணிந்து உலா வரும் ரவுடி

மதுரை வரிச்சியூரை சேர்ந்த செல்வம் என்பவர் 9.5பவுன் தங்கத்தினாலான முக கவசத்தை அணிந்துள்ளது சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.


 


மதுரை சிவகங்கை மெயின் ரோட்டில் அமைந்துள்ள வரிச்சியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் ( எ ) வரிச்சியூர் செல்வம். ரவுடி என ஒரு காலத்தில் போலீஸாரால் அழைக்கப்பட்டாலும் , தற்போது அவர் குற்றச் செயல்களைத் தவிர்த்து திருந்தி ஒதுங்கி வாழ்ந்து வருகிறார் . எப்போதும் பிறரைவிட வித்தியாசமாகத் தெரிய வேண்டும் என்பதற்காக உடல் முழுவதும் நகைகள் அணிவதை வழக்கமாக வைத்துள்ள இவர் தற்போது கொரோனாவைத் தடுக்க முகக்கவசத்தையும் தங்கத்திலேயே அணிந்துள்ளார் . இதுகுறித்து ' அவர் கூறுகையில் தான் வெளியில் செல்லும்போது 300 பவுன் நகைகளை அணிந்து செல்வதாகவும் முகக் கவசத்தை மட்டும் துணியால் அணிவது மேட்சிங் இல்லாமல் இருந்ததால் முக கவசத்தையும் 10 பவன் தங்கத்தில் அணிந்து உலா வருவதாகவும் கூறியுள்ளார்.