தீபாவளியை முன்னிட்டு கடந்த இரு நாள்களில் மதுபான விற்பனை விவரம் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு 466 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.


தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான வெள்ளியன்று 227 கோடியே 88 லட்சம் ரூபாய்க்கும், தீபாவளியன்று 237 கோடியே 91 லட்சம் ரூபாய்க்கும் மது விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 103 கோடியே 82 லட்சம் ரூபாய்க்கு மது விற்கப்பட்டுள்ளது.


திருச்சி மண்டலத்தில் 95 கோடியே 47 லட்சம் ரூபாய்க்கும், சென்னை மண்டலத்தில் 94 கோடியே 36 லட்சம் ரூபாய்க்கும், சேலம் மண்டலத்தில் 87 கோடியே 58 லட்சம் ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் 84 கோடியே 56 லட்சம் ரூபாய்க்கும் மது விற்பனையாகியுள்ளது.


கடந்த ஆண்டு தீபாவளியன்றும், அதற்கு முந்தைய நாளும் சேர்த்து 355 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை நடைபெற்றிருந்தது. இந்தாண்டு அதைவிட 111 கோடி ரூபாய் அதிகரித்து 465 கோடியே 79 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.


கொரோனா நெருக்கடி காரணமாக பொருளாதார தேக்கநிலை உருவாகியுள்ளது எனக் கூறப்படும் நிலையில் முந்தைய ஆண்டுகளை விட அதிகளவில் மது விற்பனை நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஞாயிற்றுக் கிழமையான இன்று விடுமுறை தினம் என்பதால் மது விற்பனை இன்னும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்