பழைமையான வாகனங்களைப் பதிவு செய்வதற்கான வரைவு விதிகள் சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியீடு

பழைமையான வாகனங்களைப் பதிவு செய்வதற்கான வரைவு விதிகளைச் சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது.


 


வணிகப் பயன்பாடில்லாத, சொந்தப் பயன்பாட்டில் உள்ள இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் முதன்முறை பதிவு செய்து ஐம்பதாண்டுகளுக்கு மேலான வாகனங்கள் பழைமையானவை என அதில் வரையறுக்கப்பட்டுள்ளது.


இந்த வரைவு விதிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் பழைமையான வாகனங்களுக்கு ஆங்கில எழுத்துக்கள், எண்கள் கொண்ட பத்திலக்கப் பதிவெண் வழங்கப்படும்.


பழைமையான வாகனம் என்கிற பிரிவில் ஒரு வாகனத்தைப் புதிதாகப் பதிவு செய்ய இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும்.


இந்தப் பதிவு பத்தாண்டுகளுக்குச் செல்லும். அதன்பின் மறுபதிவுக்கு ஐயாயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என வரைவு விதிகளில் குறிப்பிட்டுள்ளது.