லஞ்சம் பெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் – அதிர்ச்சி கொடுக்கும் ஆய்வு முடிவுகள்

ஆசியாவிலேயே லஞ்ச விகிதம் அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது.


 


கரப்ஷன் வாட்ச்டாக் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற ஊழல் கண்காணிப்பு அமைப்பு 2 ஆயிரம் பேரிடம் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. இதில் 50% பேர் அதிகாரிகளின் வற்புறுத்தலின் பேரில் கொடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். 32% பேர் சேவையைப் பெற லஞ்சம் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என கூறியுள்ளனர்.


மேலும் இந்தியாவில் மக்களுக்கான பொதுசேவைகளை பெற 46% பேர் தனிப்பட்ட தொடர்புகளைப் அணுகி பயன்பெறுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. தெளிவற்ற ஒழுங்குமுறை கட்டமைப்புகளே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. அதேசமயம் பொதுசேவைகளை பெற மாற்றுத் தீர்வாக “லஞ்சம்” என்பதே உள்ளது.


 


லஞ்சத்தைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சி எடுத்தும் பயனில்லை. அரசு-பொதுமக்கள் இடையே சுமூகமான உறவு ஏற்பட வழிவகை செய்ய வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஊழல் தொடர்பாக புகார் அளித்தால் நியாயம் கிடைக்கும் எனவும் கூறியுள்ளனர்.


இந்தியாவுக்கு அடுத்ததாக கம்போடியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளும், குறைவாக லஞ்சம் விகிதம் பெறும் நாடுகளாக மாலத்தீவு, ஜப்பான் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு