திருச்சி மாநகர காவல் அச்சக உரிமையாளர்களுடன் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

திருச்சி மாநகரில் உள்ள அச்சக உரிமையாளர்களுடன் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர உத்தரவுப்படி, திருச்சியில் நடைபெற்றது. நிகழ்வில் திருச்சி மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையர் அ.பவன்குமார் ரெட்டி, தலைமை தாங்கி துவங்கி வைத்தார். திருச்சி வருவாய் கோட்டாட்சியர், மாநகராட்சி கோட்ட உதவி ஆணையர்கள் பொன்மலை, கோ.அபிஷேகபுரம், அரியமங்கலம் மற்றும் ஸ்ரீரங்கம்,மாநகரத்தின் அனைத்து சரக சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் உதவி ஆணையர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஆகியோர்கள் கலந்துகொண்டனர். இதில் அச்சக உரிமையாளர்கள் 40 பேர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் 


அச்சகங்கள் கடைபிடிக்கவேண்டிய 


விதிமுறைகள்


வழங்கப்பட்டது. 


அதில்,


1) press and regulation of books act 1867 பிரிவு 3-ன் படி அச்சகத்தால் அச்சிடப்படும் அனைத்து புத்தகம்,நாளிதழ், போஸ்டர்ஸ், துண்டு பிரசுரங்கள் மற்றும் இதர வகைகளில் பதிப்பகத்தார் பெயர், இடம் மற்றும் கைபேசிஎண்,மேலும் பதிப்பகத்தார் விபரங்களுடன் தான் அச்சிடப்பட வேண்டும்.


2) பிரிவு 4-ன்படி மேற்படி சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படிவத்தின் படிபதிப்பக உரிமையாளர் பதிவு செய்யும் அரசு அதிகாரி முன் உறுதியுரை(declaration) அளிக்காமல் எவரும் பதிப்பகம் நடத்தக் கூடாது.


3) பிரிவு 12-ன் படி பிரிவு 3-ல் கூறப்பட்டுள்ள வரைமுறைகள் மீறப்படின் ரூ.2000/- வரை அபராதத்துடன் 6 மாதங்கள் வரை சிறை தண்டனையும் விதிக்கலாம்


4) நாளிதழ்கள் பதிவு விதிகள் (1956) The Registration of Newspapers Central rules(1956) பின்பற்றப்பட வேண்டும்.விதி 12-ன் படி நாளிதழ்கள் பதிவுவிதிகள் மீறப்பட்டால் ரூ.1000/- வரைஅபராதம் விதிக்கப்படலாம்.


5) பிரிவு 13-ன் படி மேற்படி சட்டப்பிரிவு 4-ன் படி உறுதியுரை அளிக்கப்படாமல் பதிப்பகம் நடத்துவது ரூ.2000/-வரை அபராதத்துடன் 6 மாதங்களுக்கு மிகாமல் சிறை தண்டனையுடன் தண்டிக்கத்தக்க குற்றமாகும். 


 


6) தமிழ்நாடு திறந்தவெளி அலகு குலைத்தல் தடுப்புசட்டம் 1959 பிரிவு


3,4-ன்படி ஆட்சேபகரமான மற்றும் உரிய அனுமதியின்றி விளம்பர பலகைகள் மற்றும் நோட்டீஸ் ஒட்டப்படுவது மேற்படி சட்டப்படி தண்டிக்கத்தக்க குற்றங்களாகும்.


7) மாநகரகாவல் எல்லைக்குள் அனாமதேய அறிவிப்புகள் அல்லது பதிப்புகள் ஏதேனும் ஒட்டப்பட்டாலோ அல்லது அச்சிடப்பட்டாலோ பதிப்பகத்தார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.


8) மாநகராட்சியின் உரிய அனுமதியோடு தான் நோட்டீஸ் அல்லது விளம்பர பலகைகள் நிறுவப்படவேண்டும்.


9) மாநகரகாவல் எல்லைக்குள் உரிய அனுமதியின்றி ஏதேனும் அறிவிப்பு,ஆவணம் போன்றவற்றை ஏதேனும் கட்டிடம்,சிறைகள், மரங்கள்,சுவர்களில் எழுதினாலோ, ஒட்டினாலோ மாநகர காவல் சட்டம் 1888 பிரிவு 71-ன்படி அபராதத்துடன் மூன்று மாதங்கள் வரை நீட்டிக்கக் கூடிய சிறை தண்டனையும் விதிக்கப்படக் கூடியகுற்றமாகும்.


10) எந்தவொரு அமைப்பு,சாதி மற்றும் மதங்கள் சம்மந்தமாக தவறான அல்லது உண்மைக்கு புறம்பான செய்திகளை அச்சிட்டோ, வெளியிட்டோ


அதன் மூலம் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு வழிவகுப்பதாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.


11) எந்தவொரு அச்சுப்பதிவும் முறையான அடையாள அட்டை வைத்திருக்கும் நபர்கள் மூலமே பெற்று அச்சிடப்பட வேண்டும்.


12) அரசியல் ரீதியாகவோ,மதம் ரீதியாகவோசட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடிய சுவரொட்டிகள், விளம்பரங்கள் மற்றும் பதாகைகள் ஆகியவற்றை அச்சிடக் கூடாது.


மேற்படி விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காத அச்சக உரிமையாளர்கள் மீது சட்டப்பட்டி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்தார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)