அரசு மருத்துவமனைக்குள் காதல்ஜோடி ஆலோசனை..! கதவை பூட்டிய மக்கள்

குலசேகரம் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்சில் நர்சை ரகசியமாக சந்திக்க வந்த காதலனை சுப்பிரமணியபுரம் பட பாணியில் அறையில் வைத்து பூட்டி போலீசில் ஒப்படைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.


 


கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அரசு மருத்துவமனையில் கொரோனாவை காரணம் காட்டி வெளி நோயாளிகள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மருத்துவமனையின் பெரும்பாலான அறைகள் காலியாக உள்ளது. இதனை பயன் படுத்தி அங்கு பணியாற்றும் நர்சு ஒருவர் தவறான செயல்களுக்கு பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகின்றது.


 


108 ஆம்புலன்ஸ்சில் செவிலியராக பணியாற்றி வந்த மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த அந்த 20 வயது நர்சிடம் பலர் எச்சரித்தும் அவர் கேட்கவில்லை என்று கூறப்படுகின்றது.


 


இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆளரவமற்ற நேரத்தில் அந்த செவிலியரை சந்திக்க இளைஞர் ஒருவர் வந்துள்ளார். அவரை காலியாக இருந்த நோயாளிகளின் படுக்கை அறைக்குள் அழைத்துச்சென்ற பெண், உள்பக்கமாக கதவை பூட்டிக் கொண்டதாக கூறப்படுகின்றது.


 


இதனை கவனித்த அந்த பகுதி இளைஞர்கள் சிலர் அந்த அறையின் கதவை சுப்பிரமணியபுரம் சினிமா பணியில் வெளிப்பக்கமாக பூட்டு போட்டுவிட்டு அரசு மருத்துவமனைக்குள் திருடன் புகுந்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.


 


இதற்கிடையே செவிலியருடன் அறைக்குள் ஒருவர் இருக்கும் தகவல் தீயாய் பரவ சிகிச்சை எடுக்க வந்தவர்களும், அப்பகுதியை சேர்ந்தவர்களும் அந்த அறையை சுற்றிவளைத்தனர்.


 


அங்கு வந்த போலீசார் உள்ளே இருப்பது திருடன் அல்ல காதல் ஜோடிகள் என்பதை அறிந்து வெளிப்பக்க பூட்டை திறந்து, அறைக்குள் இருக்கும் நர்சை வெளியில் வர கூறியுள்ளனர். கதவை திறந்து வெளியேவந்த நர்சு தன்னை சிலர் அறைக்குள் வைத்து பூட்டி விட்டதாக வும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆவேசம் காட்டியுள்ளார்.


 


போலீசார் அந்த அறைக்குள் சென்று பார்த்த போது நர்சு கூறியது போலவே அறைக்குள் யாரும் இல்லை, அறையை பூட்டியது யார் என்று போலீசார் விசாரணையில் இறங்க, அங்கிருந்தவர்கள், அந்த அறைக்குள், உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த சிறிய அறையை திறந்து பார்க்க கூறியுள்ளனர்.


 


அது பயன்படுத்தாத கழிவறை என்று செவிலியர் சமாளித்த நிலையில் அதனை திறந்து பார்த்த போது உள்ளே பதுங்கி இருந்த பாக்ஸர் வசமாக சிக்கிக் கொண்டார். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த இளைஞர் ஆரல்வாய் மொழியை சேர்ந்த ஓட்டுனர் என்பதும், நர்சுவின் காதலன் என்பதும் தெரியவந்தது.


 


தான் ஏற்கனவே பணிபுரிந்த இடத்தில் இருந்து குலசேகரம் பகுதிக்கு இடமாற்றம் செய்ததால் காதலனை சந்திக்க இயலவில்லை என்றும் எனவே திருமண வாழ்க்கை குறித்து பேசுவதற்காக காதலனை வரவழைத்ததாகவும் இனிமேல் இது போன்ற தவறுகளில் ஈடுபடமாட்டோம் என்று இருவரும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளனர்


 


இதையடுத்து இருவரையும் காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். அதே நேரத்தில் நர்சு மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


 


தமிழகத்தில் பல தாலுகா மருத்துவமனைகளின் கொரோனாவை காரணம் காட்டி உள் நோயாளிகளை அனுமதிக்காததால், மருத்துவமனைகளில் என்ன நடக்கின்றது என்பதே புரியாத புதிராக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)