தமிழன் தொலைக்காட்சி நிருபர் மோசஸ் வெட்டிக்கொலை : ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம் !

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.


காஞ்சிபுரம் மாவட்டம் , புது நெல்லூரை சேர்ந்த தமிழன் தொலைக்காட்சி நிருபர் மோசஸை நேற்று இரவு வெட்டிப்படுகொலை செய்த சமூக விரோதி கும்பலை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கண்டிக்கிறது . 


 


தாம்பரம் அருகேயுள்ள புது நெல்லூர் பகுதியில் தமிழன் தொலைக்காட்சி செய்தியாளராக வேலை செய்துகொண்டிருந்தவர் மோசஸ் நேற்று இரவு 11 மணியளவில் புது நெல்லூரில் உள்ள தனது வீட்டில் இருந்த போது தொலைபேசி எண் கேட்பது போல் ஒருவர் வந்து பேச்சுக்கொடுத்து வீட்டிற்கு வெளியே அழைத்துச்சென்றிருக்கிறார். அங்கு காத்திருந்த அந்த நபரின் கூட்டாளிகள் கத்தியால் மோசஸை பலமாக வெட்டியும் கட்டையால் அடித்துவிட்டும் தப்பி ஓடியுள்ளனர். அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த மோசஸின் தந்தை ரத்த வெள்ளத்தில் இருந்த தனது மகனை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவனையில் அனுமதித்திருக்கிறார் அங்கு மோசஸ்க்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலன்யின்றி மோசஸ் நல்லிரவு உயிரிழந்துள்ளார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.  


 


மோசஸை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பாக தெரிவித்து கொள்கிறோம். மேலும் உயிரிழந்துள்ள மோசஸ் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பாக ரூ 50லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அவரது குடும்பத்தில் ஓருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது . 


 


தமிழகத்தில் பத்திரிக்கையாளர் மீது தாக்குதல்கள் படுகொலைகள் தொடர்ந்த வண்ணமாக உள்ளது. எனவே இனி வரும் காலங்களில் இது போன்ற கொடூர சம்பங்கள் நடை பெறாமல் தடுத்து பத்திரிக்கையாளர்களை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது . 


 


எனவே : தமிழன் தொலைக்காட்சி நிருபர் மோசஸை படுகொலை செய்து தப்பி சென்ற சமூக விரோதி கும்பலை காவல் துறை உடனடியாக கைது செய்ய வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.