சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை விவகாரம்.. ஓய்வுபெற்ற டிஎஸ்பி உள்ளிட்ட காவல் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் பலர் சிக்கியுள்ளதாக தகவல்
சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 21ம் தேதி 15 வயது சிறுமியின் தாய் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தன்னுடைய மகளை, தனது அக்காவின் மகளான ஷகிதா பானு, அவரது கணவர் மதன் குமார் மற்றும் மதன் குமாரின் சகோதரி சந்தியா ஆகியோர் பணத்துக்காக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகத் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய ஷகிதா பானு, அவரது கணவர் மதன்குமார், மதன்குமாரின் தங்கை சந்தியா உள்ளிட்ட 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ததில் அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பாஜக பிரமுகர் ராஜேந்திரன் மற்றும் எண்ணூர் காவல் நிலைய ஆய்வாளர் புகழேந்தி, ரயில்வே ஊழியர் காமேஷ்வரன் ஆகிய மூவரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமியை 2 மாதங்களில் தினமும் பாலியல் தொழிலில் ஈடுபடவைத்து ஷாகிதா பானு, மதன் குமார் மற்றும் சந்தியா ஆகியோர் பணம் சம்பாதித்து வந்தது தெரியவந்துள்ளது. குறிப்பாக சந்தியா அரசியல் பிரமுகர்களின் ஆசைக்கிணங்க சிறுமியை ஈ.சி.ஆர் பகுதிகளில் உள்ள ரிசார்ட்டுகளுக்கு அனுப்பி வைத்ததும் தெரிய வந்துள்ளது. மேலும், அங்கு பல நபர்கள் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடுமையும் வெளிச்சத்திற்கு வந்தது.
இந்த வழக்கில் பாலியல் இடைத்தரர்களாக செயல்ப்பட்ட ஷகிதா பானு, மதன் குமார், சந்தியா, பாஜக பிரமுகர் ராஜேந்திரன் ஆகியோரின் மொபைல் போனை ஆய்வுசெய்து பார்த்தபோது பல நபர்களிடம் இவர்கள் சிறுமியை வைத்து விலை பேசுவது தெரியவந்துள்ளது.
மேலும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ள நபர்கள் பற்றி போலீசார் எடுத்துள்ள பட்டியலில் டி.எஸ்.பி அந்தஸ்தில் இருந்து ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர், தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கும் இரண்டு காவல் ஆய்வாளர்கள், இரண்டு மருத்துவர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தச் சம்பவத்தில் சம்மந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ள நிலையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தோர்களின் பட்டியலை நான்கு காவல் ஆய்வாளர்கள் வரை விசாரித்து வருவதாகவும், விரைவில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் பல முக்கியப் பிரமுகர்களும் அரசு அதிகாரிகளும் கைது செய்யப்படலாம் எனவும் காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்ததாக ஏற்கனவே எண்ணூர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் புகழேந்தி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன், ரயில்வே ஊழியர் காமேஷ்வரன் ஆகியோர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னும் சில காவல்துறை அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், மருத்துவர்கள் கைது செய்யப்படலாம் என்ற செய்தியானது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடனுக