“அடிப்படை வசதி கூட இல்லை” : ஆய்வுக்கு வந்த அ.தி.மு.க MLAவை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம் !

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட கச்சிப்பட்டு இந்திரா நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள கிராம மக்கள் சாலை வசதி, மின்சார வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.


 


இந்நிலையில் இன்று அ.தி.மு.கவைச் சேர்ந்த ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் பழனி மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் தன்ராஜ் ஆகியோர் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட கச்சிப்பேட்டு இந்திரா நகர் குடியிருப்பு பகுதியை ஆய்வு மேற்கொண்டனர்.


 


அப்பொழுது அங்கிருந்த பெண்கள் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் பழனியை முற்றுகையிட்டு நாங்கள் சாலை வசதி இல்லாமலும், மின்சார வசதி இல்லாமலும், குடிநீர் வசதி இல்லாமலும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். ஏன் இப்பொழுது மட்டும் எங்களை தேடி வந்தீர்கள் என்று, கேள்வி மேல் கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


அப்பொழுது ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் நான் யார் தெரியுமா என்று கேட்டதற்கு அங்குள்ள பெண்கள் நாங்ககள் ஓட்டுபோட்டு ஜெயிக்க வைத்ததற்கு பிறகு டிவியில் பார்த்திருக்கிறோம்; ஆனால், இன்றுதான் நேரில் பார்க்கின்றோம் என்றனர். இதனால் அங்கு ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் பழனிக்கு அவமானம் ஏற்பட்டது.