நெல்லையில், வயதான பாட்டியை பிச்சை எடுக்க வைத்து மது அருந்திய பேரன்
நெல்லையில், வயதான பாட்டியை பிச்சை எடுக்க வைத்து, அந்த பணத்தில் மது அருந்தி வந்த பேரனை காவல் துறையினர் கடுமையாக எச்சரித்துள்ளனர்.
பாளையங்கோட்டையில், கல்லூரி வாசலில் பிச்சை எடுத்து கொண்டிருந்த, 80 வயது மூதாட்டியை காப்பகத்தில் சேர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர், உத்தரவிட்டார்.
கூலித் தொழிலாளியான தன் பேரன், மது அருந்துவதற்காக தன்னை பிச்சை எடுக்க வைப்பதாக மூதாட்டி தெரிவித்ததால், இது குறித்து போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
மூதாட்டியிடம் பணம் வாங்க வந்த அவரது பேரன் முருகன் போலீசை கண்டதும் பைக்கை விட்டு விட்டு தப்பி ஓடினான். அவனை பிடித்த போலீசார், மூதாட்டியை நல்ல முறையில் கவனித்துக் கொண்டால் மட்டுமே பைக் ஒப்படைக்கப்படும் என எச்சரித்து அனுப்பினர்.