'உள்நோக்கத்துடன் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்யவில்லை'

ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமியை உள்நோக்கத்துடன் கைது செய்ய வில்லை என்று சிவசேனை கட்சி மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.ச்


 


கட்டட உட்புற வடிவமைப்பாளரை தற்கொலைக்குத் தூண்டியதாக ஊடகவியலாளரும், ரிபப்ளிக் தொலைகாட்சியின் ஆசிரியருமான அர்னாப் கோஸ்வாமியை மும்பை காவல்துறையினர் கைது செய்தனர்.


  


வீட்டில் அதிரடியாக நுழைந்த மும்பை காவல்துறையினர் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மும்பை வீட்டில் இருந்த தன்னை வலுக்கட்டாயமாக காவல்துறையினர் அழைத்துச் சென்றதாக அர்னாப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


கட்டட உட்புற வடிவமைப்பாளர் அன்வய் நாயக் என்பவரை 2018-ல் தற்கொலைக்கு தூண்டியதாக ஏற்கனவே அர்னாப் மீது புகார் உள்ளது. அவருக்கு அர்னாப் உள்பட 3 பேர் ரூ.5.40 கோடி தரவில்லை என்று கூறப்படுகிறது.


 


இதனிடையே கடந்த 2019-ஆம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த வழக்கை மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் உத்தரவின் பேரில் மும்பை காவல்துறையினர் மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்


இதனிடையே இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவசேனை கட்சி மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத், ''எந்தவித உள்நோக்கத்துடனும் ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்யவில்லை. மகாராஷ்டிர அரசு சட்டத்திற்கு உட்பட்டே இயங்குகிறது. எந்த நபருக்கு எதிராக ஆதாரங்கள் இருந்தாலும் காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள். உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசாங்கத்தில் பழிவாங்கும் நடவடிக்கையாக எந்த செயலும் மேற்கொள்ளப்படவில்லை'' என்று கூறினார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)