மார்ச் மாதத்திற்குள் கல்லூரித் தேர்வுகளை நடத்தி முடிக்க உயர்கல்வித்துறை முடிவு..

மார்ச் மாதத்திற்குள் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகளை நடத்து முடிக்க உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.


அடுத்த ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி தேர்வுகளை முடிக்க நடவடிக்கை


தமிழகத்தில் உள்ள கலை அறிவியல், பொறியியல், பல வகை தொழில்நுட்ப படிப்புகளுக்கான தேர்வுகளை மார்ச் மாதத்திற்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் திறக்கப்படவில்லை ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன இந்நிலையில் வரும் 16-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.. இந்த நிலையில் விரைவாக கல்லூரித் தேர்வுகளை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.