சென்னை பட்டினப்பாக்கத்தில் நட்சத்திர ஓட்டலில் போலி ஆவணங்களுடன் உக்ரைன் நாட்டு பெண்ணுடன் தங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதைப்பொருளுடன் ஒருவர் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீசார் ஓட்டலில் சோதனை நடத்தினர். இதில், போதைப்பொருட்கள் எதுவும் சிக்காத நிலையில், இலங்கையைச் சேர்ந்த சாமுவேல் என்பவர் போலி ஆவணங்களுடன் தங்கி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, பட்டினப்பாக்கம் போலீசில் சாமுவேல் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவரிடம் இருந்த போலி பாஸ்போட்டை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். இதில், கடந்த ஆண்டு காலாவதியான பாஸ்போர்ட் வைத்திருந்ததாக பெங்களூரு போலீஸ் கைது செய்து 4 மாதங்களுக்கு முன்பு ஜாமினில் விடுவித்தது தெரியவந்தது.
இந்த நிலையில், சென்னையில் தங்கியுள்ளதற்கான காரணம், யார் பண உதவி செய்கிறார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.