சென்னையிலிருந்து ஹஜ் விமான சேவை தொடர வேண்டும் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வோர் வருமான வரி செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் – பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா

“புனித ஹஜ்-2021ல் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் முஸ்லிம்களிடமிருந்து, சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு, இந்திய ஹஜ் குழு சார்பாகத் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு, ஹஜ் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.


 


ரூ2 இலட்சத்திற்கு அதிகமான செலவாகும் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்வோர் வருமான வரித் துறைக்கு வருடாந்திர கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும் என்ற பொது விதியின் அடிப்படையில் 2021ல் புனித ஹஜ் பயணத்தை மேற்கொள்வோரும் வருமான வரி தகவல்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.


ஹஜ் செல்வோர் வருமான வரி கண்டிப்பாகச் செலுத்த வேண்டும் என்பது பல ஹஜ் பயணிகளுக்குத் தேவையற்ற சுமையை ஏற்படும், மேலும் பல ஹஜ் பயணிகள் கிராமங்களிலிருந்து வருவதால் அவர்கள் வருமான வரி செலுத்துதல் என்ற நிபந்தனையை நிறைவேற்றுவது என்பது சாத்தியமில்லாதது.


 


எனவே, மத்திய அரசு புனித ஹஜ் பயணிகளுக்கு வருமான வரி கட்டாயம் என்ற அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்றும், 5 விழுக்காடு ஜி.எஸ்.டி. உள்ளிட்ட வரிகளைச் செலுத்துவதிலிருந்தும் விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்


 


மேலும் கொரோனா பரவை காரணம் காட்டி சென்னை விமானநிலையத்திலிருந்து புறப்படும் ஹஜ் பயணிகளுக்கான விமானங்கள் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து புறப்படும் என அறிவித்திருப்பது தமிழக மற்றும் புதுவை ஹஜ் பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


 


சென்னையிலிருந்து கொச்சி வெகுதூரத்தில் உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் இந்த மூன்று மாநிலத்தவரும் சென்னையிலிருந்தே புனித ஹஜ் யாத்திரைக்குப் புறப்பட்டுச் செல்கின்றனர்.


 


தற்போது கொரோனா பரவால் சென்னையிலிருந்து ஹஜ் விமானம் புறப்படாது எனத் தெரிவித்துள்ள மத்திய அரசு, தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான், கேரளா ஆகிய நான்கு மாநிலப் பயணிகளையும் கொச்சி விமான நிலையத்தில் கூடவைப்பதால் கொரோனா தொற்று மேலும் அதிகமாகுமே தவிரக் குறையாது.


 


எனவே, தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தோர் எப்போதும் போல் சென்னையிலிருந்தே புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சரும் இதனை மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)