7 மாவட்டங்களின் ஆட்சியர்கள் உட்பட 14 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழ்நாட்டில், தூத்துக்குடி, திருவண்ணாமலை, திருநெல்வேலி, இராமநாதபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களின் ஆட்சியர்கள் உட்பட 14 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


 


மீன்வளத்துறை மேலாண் இயக்குநர் சமீரன், தென்காசி ஆட்சியராக நியமிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநர் விஷ்ணு, திருநெல்வேலி ஆட்சியராகவும், சென்னை மாநகராட்சி இணை ஆணையர் மதுசூதன் ரெட்டி, சிவகங்கை ஆட்சியராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அகதிகள் மறுவாழ்வுத்துறை இயக்குநர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இராமநாதபுரம் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். 


 


சுகாதாரத்துறை இணைச் செயலாளர் கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ், இராணிப்பேட்டை ஆட்சியராகவும், தேசிய சுகாதார திட்ட இயக்குநர் செந்தில் ராஜ், தூத்துக்குடி ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.