செம்மஞ்சேரியில் இன்னமும் வடியாத மழைநீர்: வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் - ஆறுதல் கூறிய தமிழச்சி தங்கபாண்டியன்

செம்மஞ்சேரியில் உள்ள தாழ்வான இடங்களில், தொடர்ந்து மழைநீர், தேங்கி இருப்பதால் மக்கள் அவதிப்பட்டுவருகின்றனர். நேரில் பார்வையிட சென்ற தமிழச்சி தங்கபாண்டியனிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


நிவர் புயலால் பெய்த கனமழை மற்றும் ஏரிகளின் தண்ணீரால், செம்மஞ்சேரி மொத்தமாக சூழப்பட்டிருந்தது. மக்கள் பெரும் அவதிப்பட்டு வந்த நிலையில், அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் தண்ணீர் வடிந்து வருகிறது. இருந்தும், சுனாமி குடியிருப்பு, பேருந்து நிலையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற இடங்களில் தண்ணீர், இன்னும் தேங்கியே உள்ளது. சுனாமி குடியிருப்பில், தரைதள வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளதால், அங்குள்ளவர்கள் மாடிகளில் இருக்கும் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். மின்சாரம் இன்றியும் மக்கள் துன்பப்பட்டு வருகின்றனர்.


செம்மஞ்சேரி பகுதியில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்யச் சென்ற திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியனை பொதுமக்கள் சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் மழை பாதிப்புகளை தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், திமுக சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.


அப்போது அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் 5 நாட்களாக எந்த அதிகாரிகளும் தங்களுக்கு உதவவில்லை என தெரிவித்தனர். பின்னர், இனி வரும் நாட்களில் இது போன்று நடக்காது என தமிழச்சி தங்கபாண்டியன் உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


 


 


 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)