மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50சதவீத இட ஒதுக்கீடு- மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50சதவீதம் இட ஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீடு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.


 


தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்புகளில் தொலைதூரப் பகுதிகளிலும், ஊரகப்பகுதிகளிலும் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 50சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இந்திய மருத்துவக் குழுவின் விதிகளைக் காரணம் காட்டி ஒதுக்கீட்டை மத்திய அரசு ரத்து செய்தது.


 


இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், 50 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும், அரசாணையை ரத்து செய்யக் கோரியும் மத்திய அரசு மற்றும் சில மருத்துவ சங்கங்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த நாகேஸ்வராவ் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பை வழங்குகிறது.


Popular posts
கடலூர் தலைமை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்-மீது நடவடிக்கை எடுக்க ஹெல்த் அமைச்சருக்கு கோரிக்கை!
Image
அரக்கோணம் அடுத்த சோகனூர் அருகே அரசு அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதாக கூறி அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியிடை நீக்கம்
Image
பாதிரியாரை கைது செய்வதற்கு முன்பு வாடிகன் போப்பிடம் அனுமதி வாங்கனும் : அரசின் நடவடிக்கையை விமர்சிக்கும் அமைச்சரின் மருமகள்..!!
Image
நடிகையுடன் நடைபெற்ற மது விருந்து..! பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!
Image
காவேரிப்பாக்கத்தில் இந்து முன்னணி ஆட்டோ ஓட்டுனர்கள் நல சங்கத்தினர் கோரிக்கை
Image