பாலாற்றில் வெள்ளம்... 40 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வங்கக் கடலில் உருவான நிவர் புயல், நேற்று அதிகாலை புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. இதன்காரணமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியில் பல இடங்களிலும் செவ்வாய் காலை துவங்கி தொடர்மழை பெய்து வந்தது.


 


புயல் கரையைக்கடந்த பின்னரும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வியாழன் காலை துவங்கி நல்ல மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


பாலாற்றில் 40 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் அறிவுறுத்தியுள்ளார். பாலாற்றின் கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள 40 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.