தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து 35பேர் படுகாயம்.

தேசிய நெடுஞ்சாலையில் இடதுபுறம் முந்திச் சென்ற ஒரு லாரியால் பயணிகள் பேருந்து தலைகுப்புற கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.


 


ஈரோடு மாவட்டம், பெருந்துறை – கோவை தேசிய நெடுஞ்சாலையில் திருவாச்சி கூரபாளையம் பிரிவு என்ற பகுதியில் 24ந் தேதி மாலை சுமார் 4 மணியளவில் கோவையில் இருந்து சேலம் நோக்கி அரசு பேருந்து சென்றுகொண்டு இருந்தது. இதில் 35க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.


 


அப்போது கோவையில் இருந்து சேலம் சென்ற லாரி ஒன்று பேருந்தை முந்தி சென்றதோடு, திடீரென இடதுபுறம் திரும்பியதால் பேருந்து, லாரி மீது மோதியது.


 


மோதிய வேகத்தில் பேருந்து தலை குப்புற கவிந்து சாலையில் நடுவே உள்ள தடுப்பு சுவரில் சாய்ந்தது. இதனால் பேருந்தில் இருந்த 22 ஆண்கள்,13 பெண்கள், ஒரு குழந்தையும் படுகாயம் அடைந்தனர்.


 


சம்பவம் நடந்த சில நிமிடங்களில் ஏழு ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்தவர்கள் ஈரோடு அரசு மருத்துவமனை, பெருந்துறை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு உடனடியாக அனுப்பிவைக்கப்பட்டனர்.


 


இந்த விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் இல்லை. ஆனால் படுகாயங்களுடன் பயனிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


 


சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் கதிரவன், மாவட்ட எஸ்.பி தங்கதுரை ஆகியோர் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களு உரிய சிகிச்சை வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.


 


மேலும் விபத்து குறித்து பெருந்துறை போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.


 


கோவை முதல் சேலம் வரை உள்ள நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை, அடிக்கடி விபத்து ஏற்படுகிற அபாய சாலையாக இருக்கிறது


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)