ஹெல்மட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் 3 மாதங்களுக்கு ஓட்டுனர் உரிமம் ரத்து-ஒடிசா அரசு அதிரடி

ஒடிசாவில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்கள் ஓட்டினால், ஓட்டுனர் உரிமத்தை 3 மாதங்கள் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


 


இது தொடர்பாக பேசிய அந்த மாநில அமைச்சர் பத்மநாபா பெக்ரா, இருசக்கர வாகன ஓட்டிகளில் பெரும்பாலானவர்கள் ஹெல்மட் அணியாமல் செல்வதால் இத்தகைய கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.


 


பெரும்பாலானவர்கள் விபத்தில் உயிரிழப்பதற்கு ஹெல்மட் அணியாமல் செல்வதே காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


 


ஒடிசாவில் கடந்த ஆண்டு மட்டும் நடைபெற்ற விபத்துகளில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2398 பேர் பலியாயினர். அவர்களில் 2156 பேர் ஹெல்மட் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.