ஸ்வீட் எடு… திண்டாடு சாக்லேட் காதலனால் ஷாக்..! 2k கிட்ஸின் லவ் டுவிஸ்ட்

திருச்சி அருகே 100 ரூபாய் சாக்லேட் கொடுத்து ஏமாற்றி பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய 19 வயது இளைஞனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். ஆசைகாட்டி மோசம் செய்தவனால் பாதிப்புக்குள்ளான மாணவியின் பரிதாபம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..


 


திருச்சி எடமலைப்பட்டி புதூரைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு தாயுடன் கடந்த 7ம் தேதி சென்றுள்ளார். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அச்சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பதாக அவரது தாயிடம் தெரிவித்தனர். இதுகுறித்து திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும் அவர்கள் தகவல் அளித்தனர்.


 


இதையடுத்து மருத்துவமனைக்கு விரைந்த போலீசார் அச்சிறுமியிடம் நடத்திய விசாரணையில், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து போலீசாரிடம் விவரித்துள்ளார் அந்த சிறுமி..!


 


தனியார் மேனிலைப்பள்ளி ஒன்றில் 12 ம் வகுப்பு முடித்துவிட்டு படிப்பை மேலே தொடராமல் வீட்டில் இருந்து வந்த நிலையில், கடந்த 2018 ம் ஆண்டு 11 ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த கோகுல கண்ணன் என்ற சகமாணவனுடன் நட்பு ஏற்பட்டு, பின்னர் அது தீவிரக்காதலாக மாறியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 2 ம் தேதி, கோகுலகண்ணன் தனக்கு 100 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கிக்கொடுத்ததுடன் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி எல்லை மீறியதாகவும், அதனால் தான் 3 மாத கர்ப்பமாக உள்ளதாகக் கூறி அதிரவைத்துள்ளார் அச்சிறுமி.


 


இதையடுத்து கோகுல கண்ணன் மீது இந்திய தண்டனைச்சட்டம் 450 மற்றும் போக்சோ சட்டம் 2012 இன் கீழ் வழக்குப் பதிவு செய்து அவனை போலீசார் தேடிவந்தனர். கோகுல கண்ணன் பேசியதாக, அந்த சிறுமி கொடுத்த செல்போன் எண்களைத் தொடர்பு கொண்ட போது அவையனைத்தும் பயன்பாட்டில் இல்லை எனத் தெரியவந்தது.


 


இதனால் துப்புக் கிடைக்காமல் திணறிய போலீசார், சிறுமியும் கோகுலக் கண்ணனும் படித்ததாக கூறப்பட்ட பள்ளிக்குச் சென்று ஆவணங்களை ஆய்வு செய்ததில், கோகுலக் கண்ணன் என்ற பெயரில் அங்கு யாரும் படிக்கவில்லை என உறுதியானது.


 


இதையடுத்து, போலீசார் அச்சிறுமியிடம் மீண்டும் விசாரணை நடத்தியபோது, முதற்கட்ட விசாரணையில், தான் கூறிய அனைத்தும் பொய் என்றும், கர்ப்பத்திற்கு காரணம் தன்னுடன் 9 ம் வகுப்பு வரை படித்து விட்டு பாதியிலேயே பள்ளிப்படிப்பை நிறுத்தி விட்டுச் சென்ற 19 வயதான யுவராஜ் தான் எனவும் ஒப்புக் கொண்டார்.


 


8 ம் வகுப்பு படிக்கும் போது முதன் முதலாக யுவராஜ் தன்னிடம் அவனது காதலை தெரிவித்ததாகவும், ஆயினும் தான் அதனை நிராகரித்ததாகவும் தெரிவித்த சிறுமி, யுவராஜ் தனக்கு அடிக்கடி 100 ரூபாய்க்கு பெரிய டைரி மில்க் சாக்லேட் வாங்கி கொடுத்ததால் அவனது காதலை ஏற்றுக்கொண்டதாகவும், அவ்வபோது தனிமையில் சந்தித்து காதலை வளர்த்து வந்த நிலையில் யுவராஜ் தன்னிடம் ஆசைவார்த்தை கூறி அத்துமீறியதால் கர்ப்பமானதாகவும் தெரிவித்தார். மேலும், சாக்லேட் காதலன் யுவராஜைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் பெயரை மாற்றி கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.


 


சிறுமியை காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார், சாக்லெட் கொடுத்து ஏமாற்றி சிறுமியை பலாத்காரம் செய்த புகாரில் காதலன் யுவராஜை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.


 


படிக்கின்ற வயதில் படிப்பை மறந்து காதல் என்ற அதலபாதாளத்தில் விழுந்ததால் வாழ்க்கையைத் தொலைத்து நிற்கின்றனர் இந்த இரு 2k கிட்ஸும் என்று சுட்டிக்காட்டுகின்றனர் காவல்துறையினர்....! 


 


 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு